/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஈர துணியை காயப்போட்ட போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
/
ஈர துணியை காயப்போட்ட போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
ஈர துணியை காயப்போட்ட போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
ஈர துணியை காயப்போட்ட போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
ADDED : செப் 10, 2024 06:34 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி, 48. கோட்டாரில் பலசரக்கு கடை நடத்துகிறார். இவரது மனைவி நீலா, 46, கல்லுாரி ஊழியர். இவர்களுக்கு மகள் உள்ளார்.
நேற்று காலை துவைத்த ஈர துணிகளை காயப்போட, வீட்டின் பின் பகுதிக்கு சென்ற நீலா, இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை போட்டார்.
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், சத்தமிட்டவாறு கீழே விழுந்தார். மனைவியின் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற ரத்தினமணி அவரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரும் மயங்கி சரிந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், இருவரையும் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தந்தை மற்றும் தாயின் உடலை பார்த்து, ஒரே மகள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மின் கசிவு தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள், அந்த தம்பதி வீட்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக அந்த வீட்டில் உள்ளவர்கள் இணைப்பு கொடுத்திருந்த மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு, ரத்தினமணி வீட்டின் இரும்பு கூரையில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அதை அறியாமல், அந்த கூரையுடன் இணைத்திருந்த இரும்பு கம்பியில் துணியை காயப்போட்ட போது, தம்பதி விபத்தில் சிக்கி பலியானது தெரிந்தது.