/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நண்பன் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்து இறந்த தொழிலாளி
/
நண்பன் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்து இறந்த தொழிலாளி
நண்பன் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்து இறந்த தொழிலாளி
நண்பன் மரண செய்தி கேட்டு மயங்கி விழுந்து இறந்த தொழிலாளி
ADDED : செப் 07, 2024 02:05 AM
நாகர்கோவில்: நண்பன் துாக்கிட்டு தற்கொலை செய்ததை அறிந்த தொழிலாளி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சலை சேர்ந்தவர் ஜான்சன் 60. ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் 60. கூலித் தொழிலாளி. இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்கள்.
ஜான்சன் ரப்பர் பால் வெட்ட சென்ற இடத்தில் ரப்பர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நண்பர் ரசல் ராஜ் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஜான்சன் இறந்தது பற்றி அலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த உணவுடன் அப்படியே சிறிது நேரம் இருந்த அவர் பின்னர் சுருண்டு விழுந்து மயங்கினார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.