/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நாகர்கோவில் மக்களின் தாகம் தீர்க்க மேலும் ஒரு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

ADDED : ஆக 12, 2024 11:41 PM

நாகர்கோவில் : நாகர்கோவில் மக்களின் தாகம் தீர்க்க ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
மன்னர் காலம் முதல் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி நகர் மக்களின் தாகத்தை தீர்த்து வருவது முக்கடல் அணை. கோடை வெயில் சுட்டெரிக்கும் போது இந்த அணையில் தண்ணீர் குறைந்து குடிநீர் சப்ளை பாதிக்கப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை என்ற நிலை கூட உருவாகும்.
இதனால் மாற்று திட்டம் கொண்டு வர இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
2042 ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர மக்களுக்கு தினமும் குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த விழாவில் கலெக்டர் அழகுமீனா, மாநகராட்சி கமிஷனர் நிஷாந்த் கிருஷ்ணா, எம்.எல்.ஏ.,க்கள் எம்.ஆர்.காந்தி, துணை மேயர் பிரின்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.