/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்
/
பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய பைக் திருடர்கள்
ADDED : பிப் 22, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, இரண்டு பேர் திருடிச் சென்றனர். அப்பகுதி மக்கள் அவர்களை விரட்டினர்.
குண்டல் என்ற பகுதிக்கு சென்றபோது, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அங்கே நிறுத்திவிட்டு, திருடர்கள் பெட்ரோல் வாங்கி வந்தனர். அப்போது, அங்கு காத்திருந்த மக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் நாகர்கோவில், மேலராமன் புதுாரைச் சேர்ந்த ஜவகர், 28, ஆன்டனி பிரகாஷ், 32, என தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

