/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ரேஷன் கடை கட்டடத்தை திறக்க பா.ஜ., -- எம்.எல்.ஏ., காந்தி தர்ணா
/
ரேஷன் கடை கட்டடத்தை திறக்க பா.ஜ., -- எம்.எல்.ஏ., காந்தி தர்ணா
ரேஷன் கடை கட்டடத்தை திறக்க பா.ஜ., -- எம்.எல்.ஏ., காந்தி தர்ணா
ரேஷன் கடை கட்டடத்தை திறக்க பா.ஜ., -- எம்.எல்.ஏ., காந்தி தர்ணா
ADDED : ஆக 28, 2024 06:06 PM
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வட்டவிளை கலசமிறங்கி குடியிருப்பு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதற்கு சொந்த கட்டடம் கட்ட, முன்னாள் ராஜ்யசபா எம்.பி., விஜயகுமார் நிதி ஒதுக்கீடு செய்தார். கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதை திறக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததையடுத்து நேற்று காலை அங்கு சென்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி கட்டட படிக்கட்டில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு வந்த அதிகாரிகள் அவருடன் பேசி தர்ணாவை கைவிட கேட்டுக் கொண்டனர்.
திறப்பு விழா தேதியை முடிவு செய்தால் மட்டுமே தர்ணாவை கைவிடுவதாக எம்.எல்.ஏ., கூறினார். 'நாளை புதிய கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., அங்கிருந்து சென்றார்.