/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் படகு தளம் பணி நிறுத்தம் மீனவர்கள் எதிர்ப்பு எதிரொலி
/
குமரியில் படகு தளம் பணி நிறுத்தம் மீனவர்கள் எதிர்ப்பு எதிரொலி
குமரியில் படகு தளம் பணி நிறுத்தம் மீனவர்கள் எதிர்ப்பு எதிரொலி
குமரியில் படகு தளம் பணி நிறுத்தம் மீனவர்கள் எதிர்ப்பு எதிரொலி
ADDED : செப் 13, 2024 01:53 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் விவேகானந்தர் மண்டபத்தின் படகு தளம் 100 மீட்டர் நீட்டிக்க மீனவர்கள் எதிர்த்ததை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளில் பயணிகளை அழைத்து செல்கிறது. மூன்று படகுகள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவேகானந்தர் மண்டபத்தில் ஒரு படகு மட்டுமே நிறுத்த வசதி இருந்தது. சில நேரங்களில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக அரசு ரூ.33 கோடியே 80 லட்சம் செலவில் கூடுதல் படகுகள் நிறுத்த 100 மீட்டர் நீளத்தில் படகு தளம் கட்ட அனுமதி வழங்கியது. 25 மீட்டர் தூரம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணி நடந்து வந்த நிலையில் 100 மீட்டர் நீட்டிக்கும் பட்சத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பணி நடந்து வந்த நிலையில் மீனவர்கள் படகில் சென்று தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்.