/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தாயை கடத்த கூலிப்படை ஏவிய மகள், மருமகன் * 8 பேர் மீது வழக்கு; 6 பேர் கைது

ADDED : ஜூன் 11, 2024 07:39 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரைச் சேர்ந்தவர் மிக்கேல் தேவ சகாயம். இவரின் மனைவி ஜெபி சகாயம் மெட்டில்டா, 47. இவர்களது மூத்த மகள் அஸ்மி, 27. இவரை கன்னியாகுமரி அஞ்சு கூட்டுவிளை சுபாஷ், 33, என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்திற்கு பின், மகள் அஸ்மியிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள், 2.5 லட்சம் ரூபாயை தாய் ஜெபி சகாயம் மெட்டில்டா பெற்றார். அதை திருப்பிக் கொடுக்காததால் இருவருக்கும் பிரச்னை இருந்தது.
இந்நிலையில், ஜெபி சகாய மெட்டில்டா கோவளத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்ற போது கார் மற்றும் பைக்குகளில் சென்ற கும்பல் அவரை கடத்த முயன்றது. தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று கும்பலை சுற்றி வளைத்தனர். காரில் இருந்து கத்தி, மிளகாய் பொடி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அஸ்மி, அவரது கணவர் துாண்டுதலின் படி, கூலிப்படையாக கும்பல் வந்து, ஜெபி சகாயம் மெட்டல்டாவை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்க முயன்றது தெரிந்தது.
கார், பைக்குகளில் வந்த சென்னை, நாகர்கோவிலை சேர்ந்த நால்வர் மற்றும் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர். அஸ்மி, கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.