/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தந்தையை கொன்ற மகளின் கள்ளக்காதலனும் கைது
/
தந்தையை கொன்ற மகளின் கள்ளக்காதலனும் கைது
ADDED : மே 03, 2024 02:22 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை கொன்ற மகள் கைதான நிலையில் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே கடுக்கரை ஆலடிகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் 46. இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். அதிக குடிப்பழக்கத்தால் மனைவியும், ஒரு மகளும் தனியாக பிரிந்து சென்ற நிலையில் மூத்த மகள் ஆர்த்தி 21, மட்டும் தந்தையுடன் வசித்தார்.
ஏப்., 26 சுரேஷ்குமார் வீட்டில் இறந்து கிடந்தார். அதிகமாக மது குடித்ததால் இறந்ததாக மகள் ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில் சுரேஷ்குமாரின் தலை, முதுகில் காயங்கள் இருந்ததாக தெரிந்ததையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மகள் ஆர்த்தி கைது செய்யப்பட்டார். தன்னை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் திட்டியதால் பிடித்து தள்ளியதில் சுவரில் தலை இடித்து இறந்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்தார். எனினும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். தீவிர விசாரணைக்கு பின் வாட்ஸ்புரத்தில் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ள சுரேஷ் பாபு 47, என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: சுரேஷ் பாபு மூன்று திருமணங்கள் செய்தவர். ஒரு மனைவி தற்கொலை செய்த நிலையில் இரண்டு மனைவிகள் இவரை பிரிந்து சென்று விட்டனர். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் சுரேஷ்குமார் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து குடிப்பது வழக்கம். சுரேஷ்குமார் இல்லாத நேரத்திலும் சுரேஷ் பாபு அவரது வீட்டுக்கு சென்ற நிலையில் ஆர்த்தியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு இதுபோல இருவரும் மது குடித்த நிலையில் சுரேஷ்குமார் தூங்கி விட்டார். நள்ளிரவில் எழுந்த போது மகளுடன் சுரேஷ் பாபு இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து சண்டையிட்டார். அதிர்ச்சியுற்ற சுரேஷ் பாபு அவரை கீழே தள்ளி வயிற்றில் மிதித்து பின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்றனர்.