/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
டாக்டரிடம் மோசடி: முன்னாள் பேராசிரியை கைது
/
டாக்டரிடம் மோசடி: முன்னாள் பேராசிரியை கைது
ADDED : ஆக 27, 2024 04:29 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மருத்துவ மேற்படிப்புக்கு சீட் பெற்று தருவதாக கூறி பெண் டாக்டரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த முன்னாள் பேராசிரியை கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த் கென்னடி. கம்பி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சுபிமா எம். பி. பி. எஸ். முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் முதுகலை படிப்பு படிக்க திட்டமிட்ட அவர் தந்தை ஆனந்த் கென்னடி மூலம் தம்மத்து கோணம் ஞானம் நகரை சேர்ந்த முன்னாள் பேராசிரியை ஜான்சி 50 என்பவரை அணுகினார். அவர் கடலுாரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது மகன் ஜானகிராமன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்த மூன்று பேரும் சேர்ந்து பல தவணைகளாக ரூ.20 லட்சம் வரை வாங்கியதாகவும், ஆனால் சொன்னபடி மருத்துவ மேற்படிப்பு படிக்க சீட்டு பெற்று தரவில்லை என்றும் மகள் கணக்கில் ரூ.3 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தி உள்ளதாக ஆனந்த் கென்னடி போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக போலியான ஒரு உத்தரவு நகலையும் கொடுத்துள்ளனர்.
இவ்வழக்கில் ராஜாக்கமங்கலம் போலீசார் ஜான்சியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

