/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
/
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
ADDED : அக் 04, 2025 02:34 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடற் கரையில் அமைந்துள்ள கன்னியம்பலத்தை திறப்பது தொடர்பாக ஆலோசிக்கச் சென்ற அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் திறப்பு நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி ரத வீதியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான கன்னியம்பலம் என்ற கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உட்பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக் தர்கள் கன்னியம் பலத்துக்கு சென்று ஓய் வெடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். காலப் போக்கில் கன்னியம் பலத்தை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. கன்னியம்பலம் மூடப்பட்டது.
இதை மீண்டும் திறக்க கோரி குமரியை சேர்ந்த வழக்கறிஞர் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். கன்னியம்பலத்தை திறந்து பக்தர்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஆய்வு நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுமாறு கூறினர். ஆவேசம் அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எட்டப்படவில்லை.