/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நிலக்கோட்டையில் தயாரிக்கப்பட்டு நாகர்கோவில் சென்ற உலர் பழ மாலை ரூ.4 லட்சம் மதிப்பில் 4 அடியில் உருவாக்கம்

ADDED : ஆக 29, 2024 02:28 AM

நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தயாரிக்கப்பட்ட ரூ. 4லட்சம் மதிப்பிலான உலர்பழ மாலை நாகர்கோவில் கோயில் விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டது.
நிலக்கோட்டை பூ மார்க்கெட் மாலைகள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றது. இங்கு ஏலக்காய், கருப்பு திராட்சை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகிய உலர் பழங்களை கொண்டு 8 அடி மாலை இரண்டு, 4 அடி மாலை ஒன்று தயார் செய்து நாகர்கோவில் சரக்கல் விளை கோயில் திருவிழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம்.
மாலையை தயார் செய்த முருகன் கூறியதாவது: குமரி மாவட்டம் கீழவண்ணான் விளையை சேர்ந்த சத்தியசீலன், சத்திய ரூபன் ஆகியோர் இந்த மாலையை ஆர்டர் கொடுத்தார்கள். 150 பேர் கொண்ட குழுவுடன் 20 நாட்களாக தயார் செய்தோம்.
இதில் 37 கிலோ ஏலக்காய், 16 கிலோ பாதாம் பருப்பு, 15 கிலோ முந்திரிப்பருப்பு, எட்டு கிலோ கருப்பு திராட்சை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.