/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் கொடியேற்றம்
/
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் கொடியேற்றம்
ADDED : மார் 04, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் மாசி திருவிழா நேற்று காலை, 9:40 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழா பத்து நாள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒன்பதாம் நாள் விழாவான மார்ச் 11- காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12-ல் இரவு சுவாமியும், அம்பாளும் ஆராட்டு முடிந்து ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.