/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் கொட்டியது கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
குமரியில் கொட்டியது கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குமரியில் கொட்டியது கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குமரியில் கொட்டியது கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 30, 2024 09:50 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நோக்கி செல்கிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. காலை கனமழை கொட்டியது.
நாகர்கோவில் மீனாட்சிபுரம், வடசேரி அசம்பு ரோடு, கோட்டார் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டனர். தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், கொட்டாரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி முள்ளங்கினாவிளை மற்றும் மலையோர கிராமங்களில் கன மழை கொட்டியது .
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல்மழையால் ரம்யமான சூழ்நிலை காணப்படுகிறது.
48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.03 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 582 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி நீர்மட்டம் 69 . 36 அடியாக உள்ளது .அணைக்கு 388 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடல் சீற்றமாக காணப்படும் என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களும் அவசரமாக கரை திரும்பினர். மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் படகுகள் பாதுகாப்பாக கட்டி போடப்பட்டுள்ளன.