/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
முறைகேடாக பத்திரப்பதிவு மேலும் ஒரு பதிவாளருக்கு சிக்கல்
/
முறைகேடாக பத்திரப்பதிவு மேலும் ஒரு பதிவாளருக்கு சிக்கல்
முறைகேடாக பத்திரப்பதிவு மேலும் ஒரு பதிவாளருக்கு சிக்கல்
முறைகேடாக பத்திரப்பதிவு மேலும் ஒரு பதிவாளருக்கு சிக்கல்
UPDATED : ஆக 07, 2024 10:13 PM
ADDED : ஆக 07, 2024 10:10 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 33, இடலாக்குடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் - பதிவாளராக பணியாற்றி வந்தார்.
பத்து மாதங்களுக்கு முன், தோவாளை சார் - பதிவாளர் விடுமுறையில் சென்றதால் அந்தப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சார் பதிவாளர் மேகநாதன் நிறுத்தி வைத்திருந்த பல பத்திரங்களை அவரது ஐ.டி., மூலம் சுப்புலட்சுமி பதிவு செய்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேகநாதன் கொடுத்த புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் சுப்புலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். சுப்புலட்சுமி கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தோவாளையில் பொறுப்பு பணியில் இருந்த போது, முறைகேடாக பத்திரப்பதிவு நடத்தியதாக மேலும் ஒரு சார் பதிவாளர் மீது புகார் எழுந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் உள்ளதால், உடல்நிலை சீரானதும் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி பத்திரப்பதிவு
அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு
வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து, 1,500, அலுவலக அறையில், 71,230 ரூபாய்
இருந்ததை கண்டுபிடித்தனர். பணத்திற்கு உரிய கணக்கு இல்லாததால் பணத்தை
பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.