/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெண் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது
/
பெண் ஆபாச படங்களை வெளியிட்டவர் கைது
ADDED : மார் 03, 2025 06:55 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகி அவரது படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருங்கல் அருகே இனையம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
குளச்சல் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் டில்டனுடன் 32, இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகிய போது ராபர்ட் டில்டன் அவற்றை படம்பிடித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால் பிரிந்தனர். இருவரும் நெருங்கி இருந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக அப்பெண் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் ஆபாச படங்களை ராபர்ட் வெளியிட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.