ADDED : மார் 09, 2025 02:49 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் வடலிவிளையை சேர்ந்தவர் வேல் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பாரதி நகர் பகுதியில் மளிகை கடை நடத்தினார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பதுங்கி இருந்த சிலர் இவரை கல்லால் எறிந்து கீழே விழச்செய்து தலையில் மற்றொரு சிமென்ட் கல்லை போட்டு கொலை செய்தனர். தொடர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி உடலுக்கு தீ வைத்து எரித்தனர்.
கொலை தொடர்பாக எஸ்.பி., ஸ்டாலின் விசாரணை நடத்தி மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். கொலைக்கான காரணம் தெரியவில்லை.
வேலுவின் ஒரு கால் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியவிளைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. நாய் இதனை எடுத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.