/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என அறிவிப்பு
/
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என அறிவிப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என அறிவிப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என அறிவிப்பு
ADDED : மே 09, 2024 02:49 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை கொல்லத்தில் இருந்து நிபுணர் குழு ஆய்வு செய்து 4 நாட்களில் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் வரை 2.5. கி.மீ.,க்கு 222 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனை 2018 நவம்பரில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்.
நேற்று முன்தினம் மேம்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கலவை உடைந்து விழுந்தது. கான்கிரீட் போடுவதற்காக அமைக்கப்பட்ட இரும்பு பாலங்கள் வளைந்து காணப்பட்டது. பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தைக் கட்டிய தனியார் நிறுவனம் நான்கு ஆண்டுகள் பராமரித்த பின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைத்தனர். அதன் பின் பாலத்தில் போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பாலத்தின் தாங்கு சக்தி 40 டன் என்றாலும் கூடுதல் எடை தாங்கும் என்று கூறப்பட்டது.
இதற்காக இஸ்ரோவின் 95 டன் எடை கொண்ட உபகரணங்களுடன் கூடிய டாரஸ் லாரி ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. இதுபோல பாலத்தில் அதிகபட்ச வேகம் 40 கி.மீ. ஆகும் ஆனால் கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகள் அதிக வேகத்துடன் செல்வதோடு திடீரென்று பஞ்ச் பிரேக் போடுவதால் பாலத்தில் அதிர்வு தாக்கம் ஏற்படுகிறது.
கொல்லத்திலிருந்து நிபுணர்கள் குழுவினர் வந்து நான்கு நாட்களில் சரி செய்யப்படும் என்றும், பாலத்தின் துாண்கள் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பாலத்தின் உறுதி தன்மை பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.