/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கச்சத்தீவு மீட்பு பற்றி பேசும் உரிமை அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு: தளவாய்சுந்தரம் பேட்டி

ADDED : ஏப் 04, 2024 04:51 PM
நாகர்கோவில்: ''கச்சத்தீவு மீட்பு பற்றி பேசும் உரிமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு ''என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: 1974ல் மத்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்த போது அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மவுனம் சாதித்தார். 2008ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கச்சத்தீவை மீட்டகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் பதில் மனு தாக்கல் செய்த காங்., மத்திய அரசும், கருணாநிதி முதல்வராக இருந்த தமிழக அரசும், 'கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அது முடிந்து போன விஷயம்' என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய பா.ஜ., அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல், வழக்குக்கு பதில் தராமல் மவுனம் சாதித்து வருகிறது.
காங்.,- தி.மு.க., - பா.ஜ.,கட்சிகள் கச்சத்தீவு விவகாரத்தில் தமிழத்திற்கு துரோகம் செய்துள்ளது. கச்சத்தீவு மீட்பு நடவடிக்கையில் அ.தி.மு.க. மட்டுமே சரியான பாதையில் செல்கிறது.
அதனை பற்றி பேசும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் எல்லாம் தேர்தல் வரும் போது மட்டும் கச்சத்தீவு பற்றி பேசுவர். இவ்வாறு அவர் கூறினார்.