/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தொழிலாளி வைத்து மனிதக்கழிவு அகற்றிய உரிமையாளருக்கு அபராதம்
/
தொழிலாளி வைத்து மனிதக்கழிவு அகற்றிய உரிமையாளருக்கு அபராதம்
தொழிலாளி வைத்து மனிதக்கழிவு அகற்றிய உரிமையாளருக்கு அபராதம்
தொழிலாளி வைத்து மனிதக்கழிவு அகற்றிய உரிமையாளருக்கு அபராதம்
ADDED : மே 15, 2024 08:39 PM
நாகர்கோவில்:மனிதக் கழிவுகளை தொழிலாளியை வைத்து அள்ளிய வீட்டு உரிமையாளருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கோட்டார் போலீசில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட செட்டிகுளம் வேப்பமூடு ரோட்டில் உள்ள பழைய வீட்டை இடித்து கட்டுமான பணி நடக்கிறது. சம்பவத்தன்று இரவு இந்த வீட்டில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தொழிலாளி ஒருவர், வாளியால் செப்டிக் டேங்கை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அள்ளக்கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் தொழிலாளி கையால் சுத்தப்படுத்திய பணி பற்றி மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வீட்டின் உரிமையாளர் பார்த்திபன், 38, என்பவருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் அவர் மீது கோட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.