/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தொட்டி பாலத்திலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை
/
தொட்டி பாலத்திலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை
தொட்டி பாலத்திலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை
தொட்டி பாலத்திலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை
ADDED : செப் 16, 2024 11:31 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு அருகே குற்றியாறை சேர்ந்த செல்வம் -- தவமணி தேவி தம்பதியின் நான்காவது மகள் அபிநயா, 17. பேச்சிப்பாறை உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்; கபடி வீராங்கனை.
பேச்சிப்பாறை, காந்தி நகரை சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் நான்கு ஆண்டுகளாக நெருங்கிய தோழியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக, அந்த பெண் அபிநயாவிடம் பேசவில்லையாம். இது குறித்து தாயிடம் கூறி, அபிநயா வருந்தியதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை, கபடி விளையாட செல்வதாக கூறி, மற்றொரு தோழியுடன் மாத்துார் தொட்டி பாலத்துக்கு அபிநயா சென்றார். நீண்ட நேரமாக யாரிடமோ மொபைல் போனில் பேசிய அவர், திடீரென தொட்டி பாலத்தில் இருந்து குதித்தார். இருபுறமும் தண்ணீர் செல்ல ஏதுவாக கட்டப்பட்டுள்ள, 115 அடி உயரமான அந்த பாலத்திலிருந்து குதித்ததால் அவர் படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குலசேகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.