/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 1359 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
/
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 1359 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 1359 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 1359 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
ADDED : ஏப் 11, 2024 11:34 AM

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற துாக்கத் திருவிழாவில் 1359 குழந்தைகளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.
தமிழக - கேரள எல்லையான கொல்லங்கோட்டில் பத்ரகாளி அம்மன் கோயிலில் துாக்க திருவிழா பிரசித்தி பெற்றது. குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் கோயிலில் துாக்க மரத்தில் குழந்தைகளை ஏற்றுவதாக பெற்றோர்கள் வேண்டிக் கொள்வர். துாக்க மரம் என்ற மரத்தில் துாக்க காரர்கள் அந்தரத்தில் தொங்குவர். அந்த துாக்க வண்டி கோயிலை சுற்றி வரும். இது தான் துாக்க நேர்ச்சை.
இந்த ஆண்டு திருவிழா ஏப்.1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1359 குழந்தைகள் பெயர்கள் பதிவு செய்திருந்தனர். நேற்று அதிகாலை 4:30 க்கு துாக்க காரர்கள் அம்மன் சன்னதியில் வணங்கினர். தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலுக்கு எழுந்தருளினார்.
காலை 6:20 க்கு துாக்க நேர்த்தி கடன் தொடங்கியது. 41 அடி உயரம் கொண்ட துாக்க மரத்தில் நான்கு துாக்க காரர்கள் துணிகளால் இடுப்பில் கட்டிய பின்னர் அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தையாக கொடுக்கப்பட்டது. துாக்க வண்டி ஒருமுறை கோயிலை சுற்றி வந்ததும் நான்கு குழந்தைகளின் துாக்க நேர்த்தி நிறைவு பெறும். நேற்று இவ்வாறு 341 முறை இந்த துாக்கவண்டி கோயிலை சுற்றி வந்தது. விடிய விடிய துாக்க நேர்ச்சை நடந்தது. தொடர்ந்து தேவி ஆராட்டுடன் விழா நிறைவு பெற்றது.

