/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நாகராஜா கோவில் சன்னிதிக்கு ஓலை கூரை வேய்ந்த பூஜாரிகள்
/
நாகராஜா கோவில் சன்னிதிக்கு ஓலை கூரை வேய்ந்த பூஜாரிகள்
நாகராஜா கோவில் சன்னிதிக்கு ஓலை கூரை வேய்ந்த பூஜாரிகள்
நாகராஜா கோவில் சன்னிதிக்கு ஓலை கூரை வேய்ந்த பூஜாரிகள்
ADDED : ஆக 02, 2024 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவில், நாக வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். நாகத்தை மூலவராக கொண்ட கோவிலில் மூலஸ்தானத்தில் இருந்து எடுக்கப்படும் மண், பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல் பகுதி, ஓலையில் அமைக்கப்படும். ஆடி மாதத்தில், கூரையில் புதிய தென்னை ஓலை வேயப்படும்.
அதன்படி நேற்று காலை கருவறையின் கூரைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக ஓலை வேயும் பணியில் பூஜாரிகள் ஈடுபட்டனர். மேல் சாந்தி ஹரிஷா, நாராயணன் நம்பூதிரி, கிருஷ்ண தாஸ் நம்பூதிரி மற்றும் கீழ் சாந்திகள் இதில் பங்கேற்றனர்.