/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரி மாவட்டத்தை குளிர்வித்த மழை
/
குமரி மாவட்டத்தை குளிர்வித்த மழை
ADDED : ஏப் 30, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக தக்கலையில் 4.5 செ.மீ., மழை பதிவானது. திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர்.
நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. காலை, 11:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தது, மாலையிலும் மழை நீடித்தது.