/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தந்தையை கொன்ற மகள் உடல் கூறாய்வில் சிக்கினார்
/
தந்தையை கொன்ற மகள் உடல் கூறாய்வில் சிக்கினார்
ADDED : மே 01, 2024 09:46 PM
பூதப்பாண்டி:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை ஆலடி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 46, கூலித்தொழிலாளி. மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். குடிப்பழக்கம் இருந்ததால் மனைவியும், ஒரு மகளும் தனியாக சென்று விட்டனர். மூத்த மகள் ஆர்த்தி, 21, மட்டும் தந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த ஏப்., 26-ல் சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மது போதையில் தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி போலீசில் தெரிவித்தார். உடல் கூறாய்வில், அவரது தலையில் காயம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆர்த்தியை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆர்த்தி கூறியதாவது:
தந்தை குடிபோதையில் தினமும் வந்து என்னை தாக்கினார். சம்பத்தன்று தகாத வார்த்தையால் திட்டியதால், ஆத்திரத்தில் தந்தையின் கழுத்தை நெரித்தேன். அவர் மயங்கி விழுந்து இறந்து விட்டார். மது போதையில், தந்தை இறந்து விட்டதாக போலீசில் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆர்த்தியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

