/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடலில் மயங்கி விழுந்து மீனவர் பலி
/
கடலில் மயங்கி விழுந்து மீனவர் பலி
ADDED : செப் 01, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இனையம் சின்னத்துறையைச் சேர்ந்தவர் ஆரோக்கிய நிதின் 27. மீன்பிடித் தொழிலாளி. தனது உறவினரான ஜெனிஸ், ரூபன் மற்றும் 15 மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை 3:30 -க்கு தேங்காய் பட்டணம் துறைமுகத்திலிருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மயக்கம் அடைந்த ஆரோக்கிய நிதின் கடலில் விழுந்தார்.
சக மீனவர்கள் மீட்டு தேங்காய்பட்டணம் துறைமுகம் கொண்டு வந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குளச்சல் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.