/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
திற்பரப்பில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
திற்பரப்பில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
திற்பரப்பில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
திற்பரப்பில் குளிக்க அனுமதி சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : மே 16, 2024 02:24 AM
நாகர்கோவில்:சில வாரங்களாக தண்ணீர் இல்லாத திற்பரப்பு அருவியில் தற்போது அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். ஆண்டு முழுதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். ஆனால் சில வாரங்களாக கடுமையான வெயிலால் தண்ணீர் மிகவும் குறைந்து ஷவர் போல பாய்ந்தது.
பாறையோடு சேர்ந்து நின்றால் மட்டும் தலையில் சிறிதளவு தண்ணீர் விழும். இதனால் பயணியர் ஏமாற்றமடைந்தனர். சில நாட்களாக குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இரு நாட்களாக தினசரி 50 மி. மீ., மழை பெய்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கோதையாறில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் திற்பரப்பு அருவியில் அதிக அளவில் தண்ணீர் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடையை கொண்டாட வந்த சுற்றுலா பயணியர் திற்பரப்பு அருவியில் குளிக்க குவிந்தனர். ஆனால் தண்ணீர் வேகம் அதிகம் உள்ள பகுதிகளில் பயணியர் அனுமதிக்கப்படவில்லை. ஓரமாக குறைந்த அளவு தண்ணீர் விழும் பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும் திற்பரப்பில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.