/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து பெண் பலி
/
எடையை குறைக்க 'டயட்' மயங்கி விழுந்து பெண் பலி
ADDED : ஆக 03, 2024 12:40 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த அருள் வினோ -- பேபி சஷிலா தம்பதி மகள் அருள் ஷபானா லெனி, 24. இவருக்கும் சுசீந்திரம் அருகே மணக்குடி அந்திரியார் நகரைச் சேர்ந்த பெட்சன் புருனோ என்பவருக்கும் ஜனவரியில் திருமணம் நடந்தது. அருள் ஷபானா லெனி, சற்று பருமனாக இருந்ததால், உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வந்தார். மேலும், உணவு உட்கொள்வதையும் குறைத்து, 'டயட்'டில் இருந்தார்.
இதனால், அவர் மிகவும் களைப்பாக இருந்தார். அவரின் பெற்றோர் நேற்று மணக்குடி வந்து மகளுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, 'களைப்பாக இருக்கிறது. துாங்கி விட்டு வருகிறேன்' என கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் அந்த பெண் இருந்தார்.
அவரை மீட்டு, ஈத்தா மொழியில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடல் எடையை குறைப்பு மருந்துகளால் இறந்தாரா அல்லது சாப்பிடாமல் உயிரிழந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.