/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கப்பல் ஊழியர் கொலையில் கள்ளக்காதலி, கணவர் கைது
/
கப்பல் ஊழியர் கொலையில் கள்ளக்காதலி, கணவர் கைது
ADDED : மார் 07, 2025 01:21 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம், கருங்குளத்தான்விளையை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 37; கப்பல் ஊழியர். திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி மனைவி ஜான்சி, 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறியது.
பரமேஸ்வரன் தன் சொத்துக்களை விற்று லட்சக்கணக்கான ரூபாயை ஜான்சிக்கு கொடுத்துள்ளார். இதனால் பரமேஸ்வரனுடன் சென்று வசித்த ஜான்சியை, கணபதி சமரசம் பேசி தன்னுடன் அழைத்து வந்தார். கணபதி, ஜான்சியை வற்புறுத்தி, பரமேஸ்வரன் மீது கடத்தல் புகார் கொடுக்க செய்தார். இதனால் பரமேஸ்வரனுக்கும், தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கொடுத்த பணத்தை பரமேஸ்வரன் திருப்பி கேட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பலத்த காயங்களுடன் பரமேஸ்வரன், அவரது வீட்டின் அருகே இறந்து கிடந்தார். விசாரணையில், ஜான்சி, கணபதி கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.