/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பள்ளி வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்
/
பள்ளி வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்
ADDED : மார் 16, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி வேன் அஞ்சுகிராமம், மயிலாடி பகுதியில் நேற்று, 11 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு உதவியாளருடன் பள்ளி நோக்கி சென்றது.
மருங்கூர் அருகே இரவிபுதுார் பகுதியில் வந்தபோது, வேனின் ஸ்டியரிங் ராடு உடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உருண்டு கால்வாயில் கவிழ்ந்தது.
அப்பகுதி மக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 14 பேரையும் மீட்டனர். இதில், 8 பேருக்கு பெரிய காயமில்லை. மற்ற 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.