/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் உரசல் 22 மீனவர்கள் உயிர் தப்பினர்
/
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் உரசல் 22 மீனவர்கள் உயிர் தப்பினர்
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் உரசல் 22 மீனவர்கள் உயிர் தப்பினர்
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் உரசல் 22 மீனவர்கள் உயிர் தப்பினர்
ADDED : ஏப் 22, 2025 07:12 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது சரக்கு கப்பல் உரசியதில் படகு சேதம் அடைந்தது. 22 மீனவர்கள் உயிர் தப்பினர்.
முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடியப்பட்டினத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். முட்டம் லாரன்ஸ் படகை இயக்கினார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் முட்டத்தில் இருந்து 22 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் விசைப்படகு மீது உரசி சென்றது. இதில் விசைப்படகின் பின் பகுதி சேதமடைந்தது. இதனால் மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு படகுடன் கரை திரும்பினர். இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.