/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
24 மணி நேரமும் கண்காணிப்பு : திற்பரப்பில் போலீஸ் அவுட் போஸ்ட்
/
24 மணி நேரமும் கண்காணிப்பு : திற்பரப்பில் போலீஸ் அவுட் போஸ்ட்
24 மணி நேரமும் கண்காணிப்பு : திற்பரப்பில் போலீஸ் அவுட் போஸ்ட்
24 மணி நேரமும் கண்காணிப்பு : திற்பரப்பில் போலீஸ் அவுட் போஸ்ட்
ADDED : ஜூலை 12, 2011 12:29 AM
திற்பரப்பு : திற்பரப்பு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது.
திற்பரப்பு அருவியில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த கோடை விடுமுறை நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்போது சீசன் முடிந்த பின்பும் கூட்டம் காணப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்ற குறை நீண்ட நாட்களாகவே உள்ளது. அருவி பகுதியில் பாதுகாப்பு கருதி போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது.
கூட்டம் அதிமாக உள்ளதால் தினமும் பிரச்னைகளும், கைகலப்பு சம்பவங்களும் சாதாரணமாக நடக்கிறது. சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பல நேரங்களில் இல்லாததால் பிரச்னை குறித்து குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து, போலீசார் சம்பவ இடம் வருவதற்கு முன் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் தலைமறைவாகி விடுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும், கட்டண வசூலர்களும் பாதிக்கப்படுகின்றனர். சில வேளைகளில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் கூட கைகலப்பில் சென்று முடிவதாக கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால் பெருமளவு பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
அருவியின் குளிக்கும் பகுதி அருமனை போலீஸ் சரகம், பார்க்கிங் பகுதி குலசேகரம் போலீஸ் சரகம் என எல்லை பிரச்னை காரணமாகவும் சரியான பாதுகாப்புக்கு தடை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அருவியின் உட்பகுதியில் பஞ்., நிர்வாகம் சார்பில் இரண்டு பாதுகாப்பு பணியாளர்களை பணி அமர்த்தப்பட்டாலும், கூட்டம் அதிகமாகும் வேளையில் இவர்களின் கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
சுற்றுலா வரும் சிலர் அருவிக்கு வந்து குடிமகன்களாக மாறிய பின் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதால் பெரும்பாலான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. கூட்டம் அதிகமான நாட்களில் ஒரு சில போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டாலும், அவர்கள் குறிப்பிட்ட சில கடைகளில் இருந்து விடுகின்றனர்.
பாதுகாப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பணியில் இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக மாலை 6 மணிக்கு மேல் இங்கு கைகலப்பு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பஞ்., நிர்வாகம் தங்கள் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஷிப்ட் முறையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையாவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பார்க்கிங் பகுதி, கோயில் சுற்றுவட்டார பகுதிகள், அருவியின் உட்பகுதி போன்ற சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அருவியின் சுற்றுவட்டாரத்தில் அவுட் போஸ்ட் அமைத்து, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.