/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'ஸ்வீட்' சாப்பிட்ட 5 மாணவர்கள் திடீர் மயக்கம்
/
'ஸ்வீட்' சாப்பிட்ட 5 மாணவர்கள் திடீர் மயக்கம்
ADDED : ஆக 08, 2025 11:32 PM
நாகர்கோவில்:பள்ளியில், இனிப்பு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பாத்திமாபுரம் கல்பாறைப்பொற்றை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு காலை உணவுத் திட்டம் இல்லை.
நேற்று காலை பள்ளிக்கு வந்த ஐந்து மாணவர்கள், திடீரென வாந்தி எடுத்தனர். பின், தலைச்சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். அவர்களை, சூழல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர்.
கொல்லங்கோடு போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர் ஒருவர் பிறந்த நாளுக்காக கொண்டு வந்த இரு பார்சல் ஸ்வீட்டில் ஒரு பார்சலில் இருந்த ஸ்வீட்டை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்தது தெரியவந்தது.
அந்த ஸ்வீட் எங்கு வாங்கப்பட்டது; வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.