/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கடை ஷட்டரை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை
/
கடை ஷட்டரை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை
ADDED : மார் 18, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே நகைக்கடை ஷட்டரை உடைத்து, 55 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
நாகர்கோவில், மீனாட்சிபுரம் மீனாட்சி கார்டனை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 45. அஞ்சுகிராமம் சோதனைச்சாவடி அருகே நகைக்கடை வைத்துள்ளார்.
நேற்று காலை கடைக்கு சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. கடையில், 55 சவரன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.