/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மகளை பலாத்காரம் செய்த காமுக தந்தைக்கு 'கம்பி'
/
மகளை பலாத்காரம் செய்த காமுக தந்தைக்கு 'கம்பி'
ADDED : ஜூன் 03, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில் : மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி,- மகன், ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். தாய் கருங்கல் பகுதியில் ஒரு வீட்டில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வந்த தாயிடம், மகள் அழுதபடி தந்தை தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தாய், மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் கொத்தனாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.