/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரி கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து விரிசல்
/
குமரி கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து விரிசல்
குமரி கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து விரிசல்
குமரி கண்ணாடி பாலத்தில் சுத்தியல் விழுந்து விரிசல்
ADDED : செப் 09, 2025 12:21 AM

நாகர்கோவில்; 'கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணியின் போது, சுத்தியல் விழுந்ததில், விரிசல் விழுந்த கண்ணாடி இன்று மாற்றி பொருத்தப்படும்' என, விவேகானந்தா கேந்திரம் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் ஓணம் விடுமுறையையொட்டி ஏராளமான கேரள சுற்றுலா பயணியர் குவிந்தனர். மூன்று நாட்களில் 34,000 பேர் கண்ணாடி பாலம் வழியாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர். பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு தினமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்த போது, ஊழியர் ஒருவர் கையில் இருந்த சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் விரிசல் விழுந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டு, சுற்றுலா பயணியர் அதை மிதிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய கண்ணாடி சென்னையில் இருந்து நேற்று வரவழைக்கப்பட்டது.
இன்று அந்த கண்ணாடி பொருத்தப்படும் என்றும், பாலத்தின் உறுதித்தன்மையில் எந்த குறையும் இல்லை என்றும், பாலத்தில் விரிசல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.