/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
15 ஆண்டுகளாக 'சிக்காதவர்' சேற்றில் சிக்கி பரிதாப பலி
/
15 ஆண்டுகளாக 'சிக்காதவர்' சேற்றில் சிக்கி பரிதாப பலி
15 ஆண்டுகளாக 'சிக்காதவர்' சேற்றில் சிக்கி பரிதாப பலி
15 ஆண்டுகளாக 'சிக்காதவர்' சேற்றில் சிக்கி பரிதாப பலி
ADDED : மே 17, 2025 06:45 AM
நாகர்கோவில் : திருட்டு, கொலை வழக்குகளில் போலீசாரிடம் 15 ஆண்டுகளாக சிக்காதவர், குளத்து சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே வெள்ளியாவிளையைச் சேர்ந்தவர் டேவிட், 52. இவர் மீது திருட்டு, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை, 15 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். வெள்ளியாவிளையில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. போலீசாருக்கு தெரியாமல் அவ்வப்போது ஊருக்கு வந்துவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று காலை வெள்ளியாவிளை அருகே உள்ள பரணி குளத்தில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் சென்று பார்த்தனர். அப்போது தான், அது போலீசாரால் தேடப்பட்டு வந்த டேவிட் என்பது தெரிய வந்தது. நள்ளிரவில் குளத்தில் குளிக்க இறங்கியபோது, சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கருங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.