/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
உதவி செய்வதாக இளம்பெண் கழுத்தறுத்த வாலிபர் கைது
/
உதவி செய்வதாக இளம்பெண் கழுத்தறுத்த வாலிபர் கைது
ADDED : பிப் 07, 2024 01:44 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே வாஷிங் மெஷினை இயக்க உதவி செய்வதற்காக வீட்டுக்குள் வந்து பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில் கழுத்தை அறுத்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை அலங்கார மடத்தைச் சேர்ந்த 28 வயது பெண் சமீபத்தில் வாஷிங் மெஷின் வாங்கினார். இதை சரியாக இயக்கத் தெரியாததால் அக்கம் பக்கத்தினரிடம் அவர் உதவிகேட்டபோது அதே பகுதி எம். எஸ்சி. பட்டதாரி நிஷாந்த் 25, தனக்கு அதுகுறித்து தெரியும் எனக்கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் திடீரென பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு நிஷாந்தை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நிஷாந்த் கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்ததில் ரத்தம் வெளியேறி அங்கேயே மயங்கினார் . அங்கிருந்தவர்கள் ஓட முயன்ற நிஷாந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அப்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிஷாந்த் மீது கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

