/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நீச்சல் குளத்தில் மூழ்கி 'கொடை' வாலிபர் பலி
/
நீச்சல் குளத்தில் மூழ்கி 'கொடை' வாலிபர் பலி
ADDED : நவ 16, 2025 01:54 AM
நாகர்கோவில்: கேரள மாநிலம் வர்கலாவுக்கு சுற்றுலா வந்த கொடைக்கானல் வாலிபர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் தாவூத் இப்ராஹிம் 27. இவர் நண்பர்களுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலாவுக்கு சுற்றுலா வந்தார்.
இங்குள்ள ரிசார்ட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். பின்னர் தாவூத் இப்ராஹிம் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குளித்தபோது வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

