/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
/
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
ADDED : அக் 07, 2025 08:34 PM
நாகர்கோவில் : பெண்ணின் ஆடையை கத்தரிக்கோலால் வெட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கீழ முட்டத்தை சேர்ந்தவர் சகாய ஜோஸ் ஆண்டனி, 24. மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று நள்ளிரவில் குளச்சலுக்கு வந்த இவர், ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு துாங்கி கொண்டிருந்த, 36 வயது பெண் ஒருவரின் ஆடையை, சகாய ஜோஸ் ஆண்டனி கத்திரிக்கோலால் கத்தரித்து, பின் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதில், திடுக்கிட்டு எழுந்த பெண்ணிடம், சகாய ஜோஸ் ஆண்டனி கத்தரிக்கோலை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். அந்தப் பெண் புகாரின் படி, குளச்சலில் பதுங்கி இருந்த சகாய ஜோஸ் ஆண்டனியை கைது செய்தனர்.விசாரணையில், தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களின் ஆடைகளை கத்தரிப்பதை சகாய ஜோஸ் ஆண்டனி வாடிக்கையாக செய்து வந்தது தெரிந்தது.இதையடுத்து போலீசார் அவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவர் மீது, ஒரு போக்சோ உட்பட, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.