/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
/
தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
ADDED : அக் 11, 2025 01:51 AM
நாகர்கோவில்;கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தனியாக வசித்த பெண் வீட்டில் இருந்து 90 பவுன் நகைகளை கொள்ளை அடித்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
களியக்காவிளை அருகே அதங்கோட்டையைச் சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவரது மகள் ஜெகதீஷ் குமாரி என்ற டாடா 50. இவருக்கு திருமணமாகவில்லை. மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். ஜெகதீஷ் குமாரி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இவரது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 90 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பல குற்றங்களில் தொடர்புடைய கொள்ளையன் இதில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் இக்கொள்ளையில் மனைவியும் ஈடுபட்டதும் தெரிந்தது. இத்தம்பதியை தனி போலீஸ் படையினர் தேடி வருகின்றனர்.