/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மகன் சாப்பிடாததால் பெற்றோர் தற்கொலை
/
மகன் சாப்பிடாததால் பெற்றோர் தற்கொலை
ADDED : அக் 11, 2025 01:59 AM
நாகர்கோவில்:மகன் கோபித்து கொண்டு சாப்பிடாமல் சென்றதால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆமணக்கண்விளையை சேர்ந்தவர் முருகன், 80. இவரது மனைவி பார்வதி, 70. இவர்களின் இரு மகன்களில் ஒருவரான நரேஷ் குமார் கடந்தாண்டு இறந்தார்.
மற்றொரு மகன் அமுதகுமாருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
பெற்றோர் வீடு அருகே, அமுதகுமார் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பெற்றோர் வீட்டில் சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்தபோது, பெற்றோருக்கும், அமுதகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அமுதகுமார், சாப்பிடாமல் கோபமுற்று தன் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டுக்கு சென்ற போது பெற்றோரை காணவில்லை.
இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள கோவில் அருகே இருவரும் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர். அஞ்சு கிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.