/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சித்தியாக நடித்து மாணவியை அழைத்து சென்று தம்பிக்கு தாரைவார்ப்பு
/
சித்தியாக நடித்து மாணவியை அழைத்து சென்று தம்பிக்கு தாரைவார்ப்பு
சித்தியாக நடித்து மாணவியை அழைத்து சென்று தம்பிக்கு தாரைவார்ப்பு
சித்தியாக நடித்து மாணவியை அழைத்து சென்று தம்பிக்கு தாரைவார்ப்பு
ADDED : நவ 08, 2024 02:31 AM
நாகர்கோவில்:சித்தியாக நடித்து விடுதியிலிருந்து பள்ளி மாணவியை அழைத்து சென்று தம்பிக்கு தாரை வார்த்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று தக்கலையிலுள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அக்.,30 இவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்த ஒரு பெண் மாணவியின் சித்தி என்றும், தீபாவளிக்காக மாணவியை அழைத்துச் செல்வதாகவும் கூறினார். அதையடுத்து விடுதி நிர்வாகம் மாணவியை அவருடன் செல்ல அனுமதித்தது.
ஆனால் தீபாவளி முடிந்தும் மாணவி விடுதிக்கு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் விசாரித்த போது மாணவியை அழைத்துச் சென்றது சித்தி அல்ல என தெரிய வந்தது. இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில் கணியான்குளம் ஆலம்பாறையைச் சேர்ந்த ஐ.டி.ஐ., மாணவர் ராகுல் 20, மாணவியுடன் பழகி வந்ததும், தன் சகோதரி சந்தியாவை 28, விடுதிக்கு அனுப்பி மாணவியை அழைத்து வந்ததும், ஐந்து நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்செய்ததும்தெரிய வந்தது. ராகுலின் வீட்டுக்குச் சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். ராகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அவரது சகோதரி சந்தியா கைது செய்யப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின் மாணவி விடுதிக்கு அனுப்பப்பட்டார்.