/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெட்ரோல் குண்டு வீசியவர்களிடம் தீவிரவாத தடுப்பு படை விசாரணை
/
பெட்ரோல் குண்டு வீசியவர்களிடம் தீவிரவாத தடுப்பு படை விசாரணை
பெட்ரோல் குண்டு வீசியவர்களிடம் தீவிரவாத தடுப்பு படை விசாரணை
பெட்ரோல் குண்டு வீசியவர்களிடம் தீவிரவாத தடுப்பு படை விசாரணை
ADDED : நவ 13, 2024 11:15 PM
நாகர்கோவில்; மண்டைக்காடு அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி கார் எரிக்கப்பட்ட வழக்கில் கைதான இருவரிடம் தீவிரவாத தடுப்பு படை போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன் கூடலை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் . இவரது வீட்டில் கடந்த 2022 செப். 25 அதிகாலை பைக்கில் வந்த இரண்டு பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீ பிடித்து எரிந்தது. இது தொடர்பாக மண்டைக்காடு போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது . இதில் மணவாளக்குறிச்சி ஆண்டார் விளையைச் சேர்ந்த ஆதில் இமான் 22, ஆறாம் வினாயைச் சேர்ந்த முகம்மது நபீல் 22 , ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் நாகர்கோவில் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மூன்று நாள் காவலில் எடுத்த தீவிரவாத தடுப்பு படை போலீசார் சம்பவத்திற்கான காரணம் உள்ளிட்டவை தொடர்பாக இருவரிடமும் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். கருமன் கூடல் பகுதிக்கு அழைத்துச் சென்று எவ்வாறு வெடிகுண்டு வீசினர் என்பதையும் கேட்டனர்.
இவர்களுக்கு வேறு யாராவது உதவி செய்தார்களா, பெட்ரோல் கொண்டு யார் கொடுத்தது என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

