/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ராணுவ வீரர், மனைவியை தாக்கி தாலிச்செயின் பறிப்பு: கல்லுாரி மாணவர் கைது
/
ராணுவ வீரர், மனைவியை தாக்கி தாலிச்செயின் பறிப்பு: கல்லுாரி மாணவர் கைது
ராணுவ வீரர், மனைவியை தாக்கி தாலிச்செயின் பறிப்பு: கல்லுாரி மாணவர் கைது
ராணுவ வீரர், மனைவியை தாக்கி தாலிச்செயின் பறிப்பு: கல்லுாரி மாணவர் கைது
ADDED : டிச 08, 2024 02:38 AM
நாகர்கோவில்:மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தாக்கி தாலிச் செயினைபறித்த கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சிங்காரத் தோப்பை சேர்ந்தவர் சுஜின்குமார். ராணுவ வீரர். கருங்கல் அருகே கிள்ளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுஜின்குமார் மனைவி ஷீபாவுடன் மார்த்தாண்டத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த மூன்று பேர் இவர்களை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த மூன்று பேரும் முன்னால் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத கொல்லஞ்சி பகுதியில் நின்று சுஜின்குமாரின் பைக்கை வழிமறித்து தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஷீபாவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துள்ளனர்.
அவர்கள் சத்தம் போட்டதை கேட்டு சற்று தொலைவில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்ததும் இரண்டு பேர் பைக்கில் தப்பிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிடிபட்டவர் தொலையாவட்டம் கொற்றி விளை ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜோஸ்வா 22 என்பதும், கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதும் தெரியவந்தது.
தப்பி ஓடியவர்கள் முருகன் குன்றம் சுனாமி காலனி சேர்ந்த ஜெப்ரின் 22, கோவையைச் சேர்ந்த அபிஷேக் 24 என்பது தெரிந்தது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோஸ்வாவை கைது செய்தனர். இதற்கிடையில் பறிக்கப்பட்ட செயின் கவரிங் நகை என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.