/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
/
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
ADDED : மார் 04, 2024 01:23 AM

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை ஒட்டி, நாகர்கோவிலில் இருந்து சுவாமித்தோப்புக்கு அய்யா வழி பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் தலைமைபதி கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பில் உள்ளது. அவரது அவதார தினம் மாசி 20, பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அங்கு அய்யாவழி சமய மாநாடு, பூஜித குரு ராஜசேகர் தலைமையில் நடந்தது.
நேற்று காலை இங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு, சுவாமித்தோப்பு சென்றனர். அதில் மேளதாளம், சிறுமியரின் கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு புத்தகத்தை பூ பல்லக்கில் வைத்து பக்தர்கள் சுமந்து வந்தனர். எம்.பி., விஜய்வசந்த், எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர், தலைப்பாகை கட்டி பங்கேற்றனர். சுவாமித்தோப்பில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

