/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
காட்டாற்று வெள்ளத்தால் வாழைகள் சேதம்
/
காட்டாற்று வெள்ளத்தால் வாழைகள் சேதம்
ADDED : ஏப் 25, 2025 02:11 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் உலக்கை அருவி அருகே பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் காரணமாக அப்பகுதியில் பயிரிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இம்மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பூதபாண்டியை அடுத்த உலக்கை அருவி மலை, அசம்பு மலை பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இரவு முழுவதும் இந்த மழை நீடித்ததால் உலக்கை அருவியை ஒட்டி அமைந்துள்ள சட்டரஸ் பாலத்திற்கிடையே காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இது வயல் பகுதிகளிலும் புகுந்ததால் ஐந்து ஏக்கரில் பயிரிடப்பட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இவை குலை தள்ளும் பருவத்தில் இருந்ததாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.