/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி கடன் வாங்கியவர் தற்கொலை
/
வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி கடன் வாங்கியவர் தற்கொலை
வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி கடன் வாங்கியவர் தற்கொலை
வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி கடன் வாங்கியவர் தற்கொலை
ADDED : அக் 29, 2025 03:17 AM
நாகர்கோவில்: வீட்டு சுவரில் தனியார் வங்கி நோட்டீஸ் ஒட்டியதால், கடன் வாங்கியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே செருப்பலுாரைச் சேர்ந்தவர் நடராஜன், 65. தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். மாத தவணையை சரியாக செலுத்தி வந்த நிலையில், இரண்டு மாதங்களாக கட்ட முடியவில்லை.
வங்கி ஊழியர்கள் சிலர் வீட்டுக்கு நேரடியாக வந்து சத்தம் போட்டனர். வீட்டுச்சுவரில், இந்த சொத்தின் மீது கடன் வாங்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஓட்டினர்.
இதில், மனவேதனை அடைந்த நடராஜன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடராஜன் மகன் ஜெரின் புகாரில், வங்கி ஊழியர்களிடம் குலசேகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.