/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மாஜி மத்திய அமைச்சர் காரில் பைக் மோதி ஒருவர் பலி
/
மாஜி மத்திய அமைச்சர் காரில் பைக் மோதி ஒருவர் பலி
ADDED : பிப் 18, 2025 06:39 AM
நாகர்கோவில்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பயணம் செய்த காரின் பின்பக்கத்தில் பைக் மோதி ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் பால் பண்ணை ரோட்டில் காரில் வந்தார்.
விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலிக்காக கார் வேகத்தை குறைத்தபோது பின்னால் வந்த தென்காசியை சேர்ந்த கணேசன் 38, ஓட்டி வந்த பைக் மோதியது. அவரின் பைக்கில் நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமாரும் 44 வந்தார்.
பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கணேசன் வலது பக்கம் விழுந்ததால் எதிரே வந்த தனியார் சுற்றுலா பேருந்தின் சக்கரம் ஏறி நசுக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜ்குமார் படுகாயம் அடைந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவரும் பார்வதிபுரத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை முடித்துவிட்டு இருளப்பபுபுரத்துக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது.