/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
படகு போக்குவரத்து குமரியில் தாமதம்
/
படகு போக்குவரத்து குமரியில் தாமதம்
ADDED : ஆக 10, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் நேற்று காலை கடல் நீர்மட்டம் குறைந்ததால் படகு போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் தாமதமானது.
குமரியில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகும்.
நேற்று காலை பூம்புகார் படகு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் தயாராக இருந்தபோது கடல் நீர்மட்டம் மிகவும் குறைந்து பாறைகள் வெளியே தெரிந்தன.
படகுகள் தரை தட்டும் நிலை ஏற்பட்டதால் படகு போக்குவரத்து தொடங்குவது தாமதப்படுத்தப்பட்டது.
ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது.

