/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் கடல் மண்ணில் புதைந்த பொக்லைன் இயந்திரம்
/
குமரியில் கடல் மண்ணில் புதைந்த பொக்லைன் இயந்திரம்
ADDED : செப் 19, 2024 01:53 AM

நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்ல பூம்புகார் போக்குவரத்து கழகம் பொதிகை, குகன், விவேகானந்தா என மூன்று படகுகளை இயக்குகிறது.
தினமும் காலை 8:00 மணிக்கு துவங்கும் படகு போக்குவரத்து நேற்று கடல் நீர்மட்டம் திடீரென குறைந்ததால் துவங்கவில்லை.
படகு தளத்தில் மணல் அதிகளவில் குவிந்துள்ளதால் நீர்மட்டம் குறைந்ததும் படகுகள் தரைதட்ட துவங்கின.
இதனால் மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மணலை அள்ளும்பணி துவங்கியது. ஆனால், அந்த இயந்திரமும் மணலுக்குள் புதைந்தது. பின், பெரிய கிரேன் கொண்டு வரப்பட்டு மண் அள்ளும் இயந்திரம் மீட்கப்பட்டது.
அதன்பின், காலை 10:00 மணிக்கு மேல் படகு போக்குவரத்து துவங்கியது.